எம்.பி.க்கள் குழுவிடம் டக்ளஸ் பற்றி விசாரிக்குமாறு மதுரை நீதிமன்றில் வழக்கு
இலங்கைக்கு சென்ற இந்திய பாராளுமன்ற குழுவினர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து எம்.பி.க்கள் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் இருளாண்டி சென்னை உயர் நீதிமன்றில் வாசிப்பு மனு தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய குழு கடந்த 18.4.2012 அன்று இலங்கை சென்றது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியது. அந்த சந்திப்பின்போது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்தார்.
இவர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி. எனவே அவரை பற்றிய முழு விவரமும் எம்.பி.க்கள் குழுவுக்கு தெரிந்திருக்ககூடும். எனவே இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்களிடம் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி விசாரிக்க கேட்டு ஏப்ரல் 26-ந் திகதி அன்று உள்துறை செயலாளர், பொலிஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரிடம் மனு கொடுத்து இருந்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏற்றுக் கொண்ட நீதிபதி டிவிசன் பெஞ்சிற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply