சீனாவில் நிலநடுக்கம்; குறைந்தது 64 பேர் பலி
சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் மாகாணத்திலும் குவீஸு மாகாணத்திலும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 715 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் மையம் யுன்னான் மாகாணத்துக்கும் குவீஸூ மாகாணத்துக்குமான எல்லையை ஒட்டி அமைந்திருந்தது.
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு ஏற்பட்ட இந்த பூகம்பம் 5.6 புள்ளிகள் வலுக்கொண்டதாக இருந்தது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ச்சியாக பல நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
யுன்னான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply