பேராசிரியர்களின் போராட்டம் வரவேற்கப்பட வேண்டியது – ஜனாதிபதி

பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டம் வரவேற்கப்பட வேண்டியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள போராட்டம் தொடர்பில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரம் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற அமர்வுகளின் போது இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறான போராட்டங்களை நடாத்துவதன் மூலம், நாட்டின் ஜனநாயக நிலைமைகள் வெளிப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியான வழியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள் நடத்தப்படுவதனை தாம் ஒருபோதும் தடைசெய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தப் போராட்டங்கள் வன்முறைகளாக மாற்றமடைவதனை அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முதலில் தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply