இரண்டு தசாப்தத்தின் பின்னர் ஆங் சான் சூகி அமெரிக்காவிற்கு விஜயம்
மியன்மாரின் ஜனாநாயக செயற்பாட்டாளர் ஆங் சான் சூகி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு தசாப்தத்தின் பின்னர் முதல்முறையாக 18 நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
இதன் போது காங்கிரஸ் விருது, அமெரிக்காவில் சிவிலியன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது, மற்றும் ஏனைய விருதுகளை அவர் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் அமெரிக்காவிலுள்ள ஏனைய மியன்மார் மக்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
பலவருடங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆன் சான் சூகி, கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply