முல்லைத்தீவில் 202 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் சிலரை மீள்குடியேற்றுவதற்கு மாவட்ட செலயகம் திட்டமிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியிலுள்ள வேணாவில் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் வசித்துவரும் 202 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதற்கமைய நாளை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
அவர்கள் நாளை மறுதினம் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் கூறினார்.
மீள்குடியேறும் மக்களுக்கு தேவையான சமைத்த மற்றும் உலர் உணவு வகைகளையும் ஏனைய உதவிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கான ஒழுங்குகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply