சோமாலியத் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: 14 பேர் பலி
சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் நடத்தும் உணவு விடுதிக்கு பத்திரிக்கையாளர்கள் அடிக்கடி வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.நேற்று மாலை இந்த விடுதிக்குள் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் முதல் குண்டை வெடிக்கச் செய்துள்ளான். அப்போது வெளியேக் கூடிய மக்கள் மத்தியில் மற்றொருவன் குண்டை வெடிக்கசெய்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்படனர்.
ஜனாதிபதி மாளிகை அருகே நகரின் மையப் பகுதியில் நடந்த இத்தாக்குதலுக்கு எந்த இயக்குமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இப்பகுதியில் செயல்பட்டு வரும் அல்சபாப் என்னும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம் என்று ராணுவத்தினர் கூறியுள்ளனர்.
தலைநகர் மொகாடிஷுவில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்த அந்த இயக்கத்தினர் சமீபத்தில் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply