முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டக்காரர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல்
முல்லைத்தீவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக்கட்சித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், கேட்பார்குளம் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும், காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply