அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர்
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை தடுக்கும் வகையிலான முன்னெடுப்புகளுக்காக அவுஸ்திரேலியாவின் இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். அவர்கள் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அகதிகள் தமது நாட்டுக்கு வருவதை தடுக்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கையின் அதிகாரிகளுடன் நடத்தவுள்ளனர் என்று அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரத்துறை பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் மற்றும் வெளியுறவு பேச்சாளர் ஜூலி பிஸப் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை, இந்தோனிசிய ஜனாதிபதி சுசிலோ பம்பாங் யுதோயோனோவை சந்தித்தபோது தாம் இருவரும் இலங்கைக்கு செல்லவிருப்பதாக குறிப்பிட்டனர்
ஒரு மாதக்காலப்பகுதிக்குள் தமது இலங்கை விஜயம் இடம்பெறும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டு;ள்ளனர்
தமது நாட்டுக்கு படகுமூலம் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பும் திட்டத்தை அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது
மறுபுறத்தில் இலங்கைப்படகு அகதிகளை பசுபிக் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை ஒஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகி;றது
இருப்பினும் ஒஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தத்திட்டம், தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியின் வெளியுறவுத்திட்டத்தின் அடிப்படையில் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக ஒஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் சுட்டிக்காட்டியுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply