போலியான ஆவணங்கள் பயன்படுத்தினால் 10 வருட பயணத்தடை – பிரித்தானியா தூதரகம் எச்சரிக்கை

போலியான ஆவணங்களை பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்க முனையும் இலங்கையர்களுக்கு 10 வருட பயணத்தடை விதிக்கப்படும் என்று பிரித்தானியா எச்சரித்துள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய வீசா பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனை வழங்கும் உத்தியோகபூர்வ முகவர்கள் யாரையும் பிரித்தானியா இலங்கையில் நியமிக்கவில்லை.

விரைவாக பிரித்தானிய வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, இந்த முகவர் நிலையங்களின் ஊடாக போலியான வங்கி அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக 10 வருட பயணத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களை பிரித்தானியா வரவேற்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும் போலியான ஆவணங்களை பயன்படுத்துபவர்களை பிரித்தானியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply