மஹிந்த சிந்தனைக்கு நவம்பர் 8ம் திகதி வரையே கால அவகாசம் – ரணில்
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மஹிந்த சிந்தனைக்கு நவம்பர் 8ம் திகதி வரையே கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தேச வரவு – செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு நபம்பர் 8ம் திகதி நிவாரணம் வழங்காவிட்டால் அனைவரையும் இணைத்துக் கொண்டு அடுத்த வருடம் வீதியில் இறங்கவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நுகேகொட சந்தைக்கு இன்று விஜயம் செய்து துண்டுபிரசுரம் விநியோகிக்கும் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அரசுக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடவுள்ளதாகவும் அதற்கு முன்னர் அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பளம் கூட்ட முடியுமா? வாழ்க்கைத்தர சுட்டியை வர்த்தமானியில் வெளியிட முடியுமா? ஓய்வூதியப் பிரச்சினையை தீர்க்க முடியுமா? ஊழியர் சேமலாப நிதியை திருப்பித் தர முடியுமா? விஷ உரம் இன்றி விவசாயிகளுக்கு நல்ல உரம் தர முடியுமா? போன்ற கேள்விகளை எதிர்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் எழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply