ஜனாதிபதி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ஆம் திகதி போராட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 8 ஆம் திகதி போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான “டெசோ” அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்,நேற்று மாலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுப. வீரபாண்டியன், சுப்புலெட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியா வருகையை கண்டித்து 8 ஆம் திகதி எனது தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் பயிற்சி என்பதை ஏற்க முடியாது.
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் 18-ஆம் திகதியும், நாகையில் 19 ஆம் திகதியும் போராட்டம் நடைபெறும். இலங்கை தமிழர்கள் குறித்து மார்ச் மாதம் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெறும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply