கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் : ஜனாதிபதி
இந்த நாட்டில் 30 வருடமாக நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் மலர்ந்துள்ளது. கிடைத்துள்ள சுதந்திரத்தை நாம் அனைவரும் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
ஜப்பானிய அரசாங்கத்தினால் 2 ஆயிரத்து 800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் மத்திய செயற்பாட்டுக்கான கட்டத் தொகுதியை நேற்றுக் காலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வட மாகாண மக்களுக்கான விசேட வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக யாழ். போதனா வைத்தியசாலை விளங்குகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வாழுகின்ற மக்களுக்கும் இவ் வைத்தியசாலை சேவையாற்றுகின்றது.
கடந்த 30 ஆண்டுகால யுத்தம் காரணமாக எம்மால் வட மாகாணத்திற்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த நிலைமை மாறி வடக்கு மக்களுக்கும் எம்மால் இயன்ற உதவிகளை செய்ய முடிகின்றது. வடக்கிற்கான அபிவிருத்தி பணிகள் வெகுவாக நடைபெற்று வருகின்றன என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply