சீனாவில் கடும் புகைமூட்டம் போக்குவரத்து பாதிப்பு விமானங்களும் ரத்து
சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அசுத்தமான புகை மூட்டத்தினால் மூடப்பட்டது. இதனால் வாகன மற்றும் விமானப் போகுவரத்தும் பதிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வரும் புகையினாலும் அதில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் இதுபோன்ற புகைமூட்டம் ஏற்படும். 2.5 மைக்ரான் விட்டம் கொண்ட துகள்கள் காற்றில் கலந்து இருப்பதாகவும், சில இடங்களில், ஒரு சதுரமீட்டருக்கு 238 மைக்ரோ கிராம் அளவிற்கு இந்த துகள்கள் காற்றில் கலந்திருபதாக பெய்ஜிங் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்க தூதரகத்தின் காற்று மாசு அளவீட்டின்படி, ஒரு சதுர மீட்டரில் 265 மைக்ரோ கிராம் அளவுக்கு துகள்கள் இருந்தால் அது ‘மிகவும் சுகதாரமற்ற’ காற்று ஆகும்.
பெய்ஜிங்கில் மிக மோசமான கற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற நகரங்களில் இருந்து பெய்ஜிங் நோக்கி வரும் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply