பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்கு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரது கொலைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 22 பேரில் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரசந்த அல்விஸ் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களுக்கு எதிரான இந்த வழக்கை 6ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply