தூதரகத்தில் முன்னாள் அதிபர் தஞ்சம்: இந்தியா மாலத்தீவு மோதல் வலுக்கிறது

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மாலேவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இப்பிரச்னையால் இந்தியா – மாலத்தீவுகள் இடையே வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது.மாலத்தீவுகளில் வன்முறையைத் தூண்டுவதற்கான அரசியல் ஆலோசனைக் கூட்டம் இந்தியத் தூதரகத்தில் நடைபெறுகிறது என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதனை இந்தியத் தரப்பு மறுத்துள்ளது. எந்த அரசியல் ஆலோசனைக் கூட்டமும் இந்தியத் தூதரகத்தில் நடத்தப்படவில்லை. நஷீத்தை சந்திக்க வரும் முக்கியமானவர்கள் மட்டுமே தூதரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலத்தீவுக்கான இந்தியத் தூதர் டி.எம். முலாய், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைக்கப்பட்டார். இந்தியத் தூதரகத்தில் நஷீத் பதுங்கியிருப்பது குறித்து அவரிடம் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான குறிப்பும் அளிக்கப்பட்டது. மாலத்தீவில் இந்திய தூதரகத்துக்கு கண்டனக் குறிப்பு அளிக்கப்படுவது இதுவே முதல்முறை.

முன்னாள் அதிபர் நஷீதுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவர் பிப்ரவரி 13-ம் தேதி இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக இந்தியா – மாலத்தீவு இடையே அதிகாரிகள் நிலையில் மட்டுமல்லாது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அளவிலும் பேச்சு நடைபெற்று வருகிறது. எனினும் சுமுகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தப் பிரச்னை தொடர்பாக கவலை தெரிவித்துள்ள மாலத்தீவு தேர்தல் ஆணையம், “நாட்டின் பெரிய கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளர் வெளிநாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளது கவலைக்குரிய விஷயம்’ என்று கூறியுள்ளது.

இதனிடையே நஷீத்தை புதன்கிழமைக்குள் தங்கள் முன்பு ஆஜர்படுத்த வேண்டுமென்று போலீஸôருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply