இலங்கை தூதரகத்துக்கு முன்பாக சென்னையில் பாரிய எதிர்ப்பு போராட்டம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடியலை வலியுறுத்தி இன்று ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதற்குத் தமிழகத்தின் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மீது இனப்படுகொலைதான் நடத்தப்படுகிறது என்பதை இந்தியாவும், உலக நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply