ஷிராணிக்கு ஏப்ரல் முதலாம் திகதிவரை கால அவகாசம்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆணைக்குழு அறிவித்ததற்கிணங்க முன்னாள் பிரதம நீதியரசர் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் ஆஜரான போதே இந்தக்கால அவகாசம் வழங்கப்பட்டது.  இலஞ்ச ஆணைக்குழு தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு மேலதிக காரணங்களை தெரிவிப்பதற்காகவே எதிர்வரும் 01 ஆம் திகதி வரை இலஞ்ச, ஊழல் புலனாய்வு ஆணைக்குழு நேற்று (18-03) கால அவகாசம் வழங்கியது.

இந்த எதிர்ப்புக்கான காரணங்களை எழுத்து மூலமாக அத்தினத்தன்று (01) ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி வழக்குரைஞர் நணுன் லத்துவஹெட்டி உட்பட வழக்குரை ஞர்களுடன் ஆஜரான அவர் தமக்கெதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்துவது தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிட்டார்.

ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினர் தொடர்பாக அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த உறுப்பினரின் மனைவியான சட்டத்தரணி குற்றப்பிரேரணை தொடர்பாக ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பாக பிரஸ்தாபிக் கப்பட்டது.

ஷிராணி பண்டாரநாயக்கவின் விசா ரணையில் சமர்ப்பிக்கப்படும் காரணங்களைக் கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கை களை மேற்கொள்வதாகக் கூறிய ஆணைக் குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபரின் தகுதிகளை தாம் கவனத்திற் கொள்வதில்லை என்றும், காரணங்களை மட்டுமே கருத் திற் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அவர் சமர்ப்பிக்கப்படும் காரணங்களுக்கு பதில் வழங்கினாலும், இல்லாவிட்டாலும் சமர்ப்பிக்கப்படும் காரணங்களின் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அந்த அதிகாரி, ஏப்ரல் 01 ஆம் திகதி அவரின் எதிர்ப்புக்குக் காரணங்களை அவர் சமர்ப்பிப்பாரென்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply