தமிழாட்டில் இலங்கையர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்துக்குச் செல்லும் இலங்கையர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அம்மாநிலத்துக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இது தொடர்பான தீர்மானம் கொழும்பிலோ அல்லது அம்பாந்தோட்டையிலோ முன்னெடுக்கப்படவுள்ளது என்று அவ்வமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது நாளாகவும் தமிழ்நாட்டில் வைத்து இலங்கை பௌத்த பிக்குமார்கள் இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply