பாலசந்திரனது மரணம் தொடர்பில் சந்தேகம் – அழகிரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ் மக்களின் கொள்கையும் அடிப்படையில் வித்தியாசமானதாகும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தைக் கோரிய போதும், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்தைக் கோரவில்லை.
இந்தநிலையில், தமிழ் நாட்டில் உள்ள சில கட்சிகள் தமிழீழ கொள்கையை வைத்துக்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன.
அண்ணா தி.மு.கவும், தி.மு.கவும் இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருந்தன.
எனினும், அது தொடர்பில் அந்த கட்சிகளால் இந்தியாவின் தேசிய கட்சிகளை இணங்க செய்ய முடியவில்லை என்ற அழகிரி குறிப்பிட்டார்.
எனவே, தமிழர் தீர்வு விடயத்தில் தோல்வி கண்டுள்ள தமிழக கட்சிகள் தமது இயலாமையை மறைப்பதற்காகவே, காங்கிரசின் மீது குற்றச்சாட்டை முன்வைப்பதாக அழகிரி குற்றம்சுமத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply