ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஐநாவில் பிரகடனம்

சர்வதேச ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை செய்துள்ளது. இது தொடர்பான பிரகடனம் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த பிரகடனம் தொடர்பான உடன்படிக்கைக்கு ஆதரவாக 154 நாடுகளும், எதிராக 3 நாடுகளும் வாக்களித்துள்ளதுடன் 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுத வர்த்தகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரியா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன. ரஷ்யா, மற்றும் சீனா போன்ற உலகில் பாரிய ஆயுத ஏற்றுமதி நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், ஆயுத வன்முறைகள், இனப்படுகொலைகளுக்கு ஆயுதங்கள் பயன்படுத்தல், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் மற்றும்  பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறும் நாடுகளுக்கு  ஆயுதங்களை விற்பனை செய்வது முற்றுமுழுதாக தடைசெய்யப்படவுள்ளது.

கறுப்புச் சந்தைகளில் ஆயுதங்கள் பரிமாற்றப்படுகின்றமையும் இந்த உடன்படிக்கை மூலம் கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

நீண்டகாலமாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்துஇ ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இந்த உடன்படிக்கை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply