இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கைத் தமிழர்கள் கைது

தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 120 பேர் படகில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றனர். அவர்கள் நாகப்பட்டினம் அருகே சர்வதேச கடல் எல்லையில் சென்றபோது படகு பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்தனர்.

இது குறித்து செய்தி அறிந்த இந்தியக் கடலோர காவல் படையினர், அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (06) காலை அவர்களை சர்வதேச கடல் எல்லையில் மீட்டு, கைது செய்து தமிழகத்துக்கு அழைத்து வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் கூறினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply