விசேட சட்டக் கோவையை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை

இனங்கள் மற்றும் மதங்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களை முழு அளவில் கட்டுப்படுத்தும் பொருட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ள விசேட சட்டக் கோவைக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை தாக்கல் செய்யப்படவிருந்த போதிலும் அது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமது எதிர்ப்பையும் மீறி அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தாம் கடுமையான தீர்மானத்தை எடுக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply