தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உயிர்பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 6 மரண விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.இவ் விபத்துக்களின் போது பொதுமக்கள் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவ் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
வாகனங்கள் அதிவேகமான பயணித்தமையின் காரணமாகவே இவ் விபத்துக்களில் அதிகமானவை நேர்ந்துள்ளன.
அதிவேகமாக பயணிக்கும்போது வாகனத்தை செலுத்தும் சாரதிகள் ஆசனப்பட்டியை அணிவதில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை செலுத்தும் அதி கூடிய வேகம் ஒரு மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர்கள் என்பதாகும்.
எனினும் சில வாகன சாரதிகள் இந்த வேக அளவை விட கூடுதலான வேகத்தில் பயணிப்பதாகவும் பொலிஸார் சுட்டிக் கட்டினர்.
அதிவேகமாக வாகனத்தை செலுத்திய வாகன சாரதிகள் 5,174 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply