சவுதியிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினைக்கு துரித நடவடிக்கை

சவூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமனம் பெற்று அங்கு சென்றுள்ள வி. கிருஷ்ணமூர்த்தி தனது நியமனக்கடிதத்தை சவூதி மன்னரிடம் இன்று கையளிக்கவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவருக்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட இவர் கடந்த 30ஆம் திகதி அந்நாட்டுக்குப் பயணமானார்.

சட்ட விரோதமான முறையில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைத் தூதுவராக தான் பதவியேற்றுக் கொண்டதும் அவர்களது பிரச்சினைகள் குறித்து துரித நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வி. கிருஷ்ணமூர்த்தி, ஹற்றன் ஐலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அவுஸ்திரேலியாவில் தனது முதுகலைமாணி பட்டத்தை முடித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சில் 18 வருடங்களாக சேவையாற்றி வரும் இவர் சென்னையிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தில் பிரதி உயர்ஸ்தானிகராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply