அமெரிக்க தீர்மானம் நிறைவேற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.

அதில், இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற அம்சத்தை சேர்த்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply