இலங்கையில் சகல மருந்துகளுக்கும் கட்டுப்பாட்டு விலை : அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளதென வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கடந்த மார்ச் 04 ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்திருப் பதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கிணங்க கட்டுப் பாட்டு விலையையும் மீறி மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தனியார் மருந்தகங்களிலும் மருத்துவ மனைகளிலும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கான விலைகளை தன்னிச்சையாக அதிகரித்து விற்பனை செய்வதனால் நாட்டு மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீண்டகாலமாக அவதானம் செலுத்தி வந்தார்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நிர்ணய விலையினை நடைமுறைப்படுத்துவதனை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்ட தற்கமையவே நாம் இதனை அமுலுக்கு கொண்டு வந்துள்ளோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருந்தகங்களுக்கு மருந்தகம் மருந்துகளின் விலைகள் வேறுபடுகின்றன. சிலர் 800 சதவீதம் வரை இதனால் இலாபமடை கின்றனர். இனிமேலும் நோயாளிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் முறை யினை நீடிப்பதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கா தெனவும் அமைச்சர் கூறினார்.
நுகர்வோர் அதிகார சபையின் சட்ட விதிமுறைகளுக் கமையவே இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கட்டுப்பாட்டு விலையிலும் 10 சதத்தினால் அதிகரித்து மருந்துகளை விற்பனை செய்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயிக்கும் முறைமை ஏற்கனவே அமுலில் இருந்த போதும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது ரவி கருணாநாயக்க எம்.பி.யினால் 2002 ம் ஆண்டு இந்நடைமுறை ரத்துச் செய்யப்பட்டது.
இதற்குரிய வர்த்தமானியை ரத்துச் செய்ததன் மூலம் ஐ.தே.க. அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர். கடந்த 11 வருடகாலமாக ரவி கருணாநாயக்க எம்.பியின் தயவினால் தனியார் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் இலாபம் சம்பாதித்தது போதும். இனிமேல் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கண்டிப்புடன் நடந்து கொள்ளுமெனவும் அமைச்சர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply