சூரியனை விட 1,300 மடங்கு பெரிய நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனை விட 1,300 மடங்கு பெரிய நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இது பூமியில் இருந்து சுமார் 12,000 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் ( 1ஒளி ஆண்டு = 9.4 லட்சம் கோடி கி.மீ.) உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விண்வெளி ஆய்வுக் குழுவின் தலைவர் ஆலிவர் சிùஸன்யூ கூறியதாவது .

சிலி நாட்டின் அடகாமாவில் தொலைநோக்கி மூலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது சூரியனை விட 1,300 மடங்கு பெரிய நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியன் இடம் பெற்றுள்ள “சென்டாரஸ்’ நட்சத்திரக் கூட்டத்திலேயே இதுதான் மிகப் பெரிய நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்துக்கு எச்ஆர் 5171ஏ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நட்சத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். சூரியனை விட இது 10 லட்சம் மடங்கு பிரகாசமானது. இந்த நட்சத்திரத்துடன் அதன் துணை நட்சத்திரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்த நட்சத்திரத்தை 1,300 நாள்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. மேலும் புதிய நட்சத்திரத்தின் அருகே ஆச்சரியப்படும் வகையில் மிக நெருக்கமாக மற்றொரு நட்சத்திரம் ஒன்றும் சுற்றி வருகிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply