தமிழக மீனவர்கள் 32 பேர் ஊரக்காவல்துறை நீதிமன்றத்தால் இன்று விடுதலை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படிப்படியாக இலங்கை அரசு விடுதலை செய்து வருகிறது.அதன்அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள் இலங்கை இன்று விடுதலை செய்தது.கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 32 மீனவர்களும் இன்று ஊரக்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட 8 படகுகளையும் விடுக்க உத்தரவிட்டார்.இதற்கு முன் 140 மீனவர்களை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply