இலங்கைக்கு எதிரான பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன. இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விமர்சிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலமாக இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புதிய பிரேரணையின் படி சுயாதீன விசாரணையை மேற்கொள்ள இலங்கைக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணையை மேற்கொள்வதற்கு முயற்சிக்கவில்லை என அந்த பிரேரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை மூலம் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் முழுமையான விமர்சனத்தை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் முடியாது என மனித உரிமைகள் குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கலந்து கொண்டுள்ள நாடுகளிடம் இலங்கை தொடர்பிலான வாதத்தை தெரிவித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply