உத்தரபிரதேசத்தில் உலகிலேயே மிகப் பெரிய கிருஷ்ணர் கோவில் 70 மாடியில்

பகவான் கிருஷ்ணன் சிறுவயதில் கோபியர்களுடன் விளையாடியதாக கூறப்படும் பிருந்தாவனம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு கிருஷ்ணருக்கு 70 மாடியில் கோவில் கட்ட இஸ்கான் அமைப்பு திட்டமிட்டு உள்ளது. 62 ஏக்கர் நிலப்பரப்பில் 213 மீட்டர் உயரத்தில் இந்த கோவில் அமைய உள்ளது. ‘‘பிருந்தாவன சந்திரோதய மந்திர்’’ என இக்கோவிலுக்கு பெயர் சூட்டப்பட உள்ளது.கோவிலை சுற்றி 30 ஏக்கரில் மலர் செடிகள், மற்றும் மரங்கள் வளர்க்கவும் இஸ்கான் திட்டமிட்டு உள்ளது.

கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய கோவிலாக இது அமையும் என இஸ்கான் அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply