தேர்தல் முடிவுகளால் ஆடிப்போயுள்ள அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நடத்தப்போவதில்லை : ரணில்

மாகாண சபை தேர்தல் முடிவுகளால் ஆடிப்போயுள்ள அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ நடத்தப்போவதில்லையென அடித்துக் கூறும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் என்ற ”மரத்தின்” வேர்களை மக்கள் தளர்வடையச் செய்துள்ளனர். இனி அனைத்துக் கட்சிகளும் இணைந்து அம்மரத்தை கீழே விழுத்த வேண்டியது மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் கூறினார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்களில் மக்கள் அரசாங்கத்திற்கு ஆபத்து சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த தேர்தலைவிட அரசாங்கம் பின்னடைவைக் கண்டுள்ளது.

அரசாங்கம் என்ற மரத்தின் வேர்களை மக்கள் தமது வாக்குப்பலத்தால் தளர்வடையச் செய்துள்ளனர். இனி அரசாங்கம் என்ற மரத்தை கீழே சாய்த்துவிடுவதே எஞ்சியுள்ளது. இதற்காக ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயகக் கட்சி உட்பட அனைவரும் ஒன்றுசேர வேண்டும். அது மட்டுமல்லாது பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்தால் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும். அதற்காக வீதியில் இறங்கி தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ நடத்தப் போவதில்லை.  தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்துள்ளது.

எதிர்காலம்

தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. தற்போது எமது கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்லும் தேவை ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) கட்சியின் தலைமைத்துவ சபையும், நிறைவேற்றுக் குழுவும் கூடி எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply