நரேந்திர மோடி பிரதமரானால் அது நாட்டிற்கே துரதிருஷ்டவசமாக போய்விடும் : உமர் அப்துல்லா 

காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, “நாட்டை வழிநடத்தி செல்ல ராகுல் காந்தி தான் தகுதியானவர். நரேந்திர மோடி பிரதமரானால் அது நாட்டிற்கே துரதிருஷ்டவசமாக போய்விடும்” என்று கூறினார். காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் நகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உமர் அப்துல்லா பேசியதாவது:-முஸ்லிம்களுக்கு எதிரான சர்வாதிகார போக்கு மற்றும் கொடிய அணுகுமுறையால் நரேந்திர மோடி பன்முக பண்பாடு கொண்ட நாட்டை வழி நடத்த தகுதி இல்லாதவர் ஆகிறார்.

ஆனால், ராகுல் காந்தி தெளிவானவர். வெளிப்படையானவர். சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்காகவும் அவர் போராடுகிறார். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி சிறந்த நண்பராக உள்ளார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகிறார். காஷ்மீர், பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரவும், வளர்ச்சியை நோக்கி செல்லவும் எப்போதுமே ராகுல் ஆதரவாக உள்ளார். எனவே ராகுல்தான் நாட்டை வழி நடத்த தகுதியானவர்.

மதவாத சிந்தனை கொண்ட சர்வாதிகாரி அல்லது மதச்சார்பற்ற ஜனநாயக இளைஞன் இருவரில் ஒருவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் நாடு உள்ளது. ஜம்மு காஷ்மீரில், காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, மதச்சார்பற்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.

குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கேட்காத, முஸ்லிம்கள் அன்பளிப்பாக அளித்த தொப்பியை அணிய மறுத்த மோடிக்கு பிரதமராகும் தகுதியில்லை. மோடிக்கும், அவரது கட்சிக்கும் உதவி செய்வதற்காகவே காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பா.ஜ.க.வும், மக்கள் ஜனநாயக கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply