எதிர்கட்சித் தலைவர்களை ஐ.தே.க தீர்மானித்துள்ளது
மேல் மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக மஞ்சு ஸ்ரீ அரங்கலவையும், தென் மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக தென்னகோன் நிலமேவையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் நேற்று ஒன்று கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, மேல் மாகாணசபையின் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளராக ஹர்ஷன ராஜகருணாவின் பெயர் பிரேரிக்கப்பட்டு தலைமைத்துவ சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர, தென் மாகாண சபையின் அமைப்பாளர் பதவிக்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் தொழிலாளர் தினத்தை ஐக்கிய தேசிய கட்சி அம்பாறையில் கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply