ஜம்மு-காஷ்மீர் வெள்ளம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டிய சிறுமிக்கு மோடி கடிதம்
ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டிய 16 வயது சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். குவைத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி துவ்வுரி ரோகினி பிரத்யுஷா. பாரதிய வித்யா பவன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் இவர் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரியும் நோக்கத்தில் குவைத்தில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களிடம் ரூ. 2.15 லட்சம் நிதி திரட்டி அதனை குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளார். குவைத்தில் இருந்து இத்தொகை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டது.
துவ்வுரியின் இச்செயலை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்ட சிறுமியின் தலைமை மற்றும் நிர்வாக திறன்களை பாராட்டுவதுடன், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply