ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் பலி

ஈராக்கில் அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புகளில் சிக்கி 38 பேர் பலியாகினர். தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஜர்ப் அல் சகர் என்ற நகரம் உள்ளது. கர்பலா நகருக்கு செல்லும் இணைப்புப் பாதையான இந்த நகரின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியின் மீது வெடிகுண்டுகளுடன் வந்த காரை தற்கொலைப்படை தீவிரவாதி மோதச் செய்ததில் 24 பேர் சம்பவ இடத்திலேய பலியாகினர். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதேபோல், பாக்தாத் நகரின் புறநகர் பகுதியில் வணிக வளாகங்கள் நிறைந்த பரபரப்பான பகுதியில் மேலும் ஒரு கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 14 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயமடைந்தனர்.

முஹம்மது நபியின் பேரரான இமாம் ஹுசைன் அவர்கள் போரில் கொல்லப்பட்ட இடமான  கர்பலா நகருக்கு முஹர்றம் மாதத்தில் ஏராளமான ஷியாப் பிரிவு முஸ்லிம்கள் இந்த மாதத்தில் யாத்திரை செல்வதுண்டு.

வரும் 4-ம் தேதி முஹர்றம் தினம் வருவதால், அந்த யாத்திரிகர்களை குறி வைத்து இவ்விரு தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply