ஜனாதிபதி ஆழ்ந்த கவலை மீட்புப் பணிகளை துரிதமாக்க பணிப்பு
ஹல்துமுல்ல, கொஸ்லந்த, மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவி த்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நேற்று உடனடியாக பணிப்புரைகளை வழங்கினார். எமது சகோதர தோட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் அமைச்சர் தொண்டமானையும் அனுப்பி வைத்துள்ளார்.
திருகோணமலைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து தனது கவலையை மேலும் வெளிக் காட்டினார்.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோ ருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி அவர்கள் உச்ச அளவில் இயன்ற அனைத்து உதவிகளையும் அந்த மக்களுக்காக மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி யின் ஊடகப் பிரிவு தெரிவித்து ள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply