சீன நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 24 பேர் பலி
நிலக்கரி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக விளங்கும் சீனாவில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நிலக்கரி சுரங்க பாதுகாப்பில் அந்நாடு தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ராயட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அந்நாட்டு அரசுக்கு சொந்தமான ‘புக்சின் நிலக்கரி நிறுவன’ சுரங்கத்தில் இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று நள்ளிரவில் 1.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இவ்விபத்து ஏற்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த மாதம் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு மட்டும் சுரங்க விபத்தில் 1049 பேர் மரணமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து இறந்துவரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாடு பலப்படுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply