சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்: 3 பேர் காயம்
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானது. சிச்சுவான் மாகாணம், காங்டிங் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்திற்குட்பட்ட பமேய் நகரில் இருவரும், க்சைடே நகரில் ஒருவரும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பமேய் நகரை ஒட்டியுள்ள சோங்கு கிராமத்தில் உள்ள பல வீடுகள் இடிந்து விழுந்தன. பூமிக்கடியில் 16 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பத்தால் காங்டிங் விமான நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்ததுடன், சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது. இதே பகுதியில் தான் கடந்த சனிக்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply