யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இன்று அறிவிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இன்று அறிவிக்கப்படும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தோதலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்று பகிரங்கமாக அறிவிக்கப்படும் என அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக நாடு முழுவதிலும் உள்ள பௌத்த மக்கள், பௌத்த அமைப்புக்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மிகவும் தீர்மானமிக்க வகையிலான இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இன்று அமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைப்பின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட உள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாரியளவில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாக நேற்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply