மலேசியர்கள் மிகவும் முட்டாள்தனமாக விமான சேவை நடத்துகிறார்கள்: முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது

மலேசியர்கள் மிகவும் முட்டாள்தனமாக விமான சேவை நடத்துவதாகவும், மோசமான நிலையில் உள்ள தேசிய விமான போக்குவரத்து துறையின் தலைமைப் பொறுப்பை வரும் ஆண்டிலிருந்து ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் ஏற்க உள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மகாதீர் முகமது இவ்வாறு கூறினார். மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 70 சதவீத பங்குகளை வைத்திருக்கும் அரசுக்குச் சொந்தமான கஜானா நேஷனல் பெர்ஹாட் நிதி நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் நஷ்டத்திற்கு காரணமாணவர்கள் தற்போது தங்களது பாதையை சரியான திசைக்கு மாற்றி வருகிறார்கள் என்று குத்திக்காட்டினார்.மார்ச் 8 ஆம் தேதி 239 பயணிகளுடன் மர்மமான முறையில் மறைந்து போன MH370, ஜீலை 17 அன்று 298 பேருடம்  உக்ரைனுக்கு சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17, போன்ற சம்பவங்களால் தற்போது நடந்து முடிந்த ஏழாவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அதிகபட்ச நஷ்ட கணக்கோடு முடிந்துள்ளது.

இந்நிலையில் சீரமைக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ்-ன் தலைமை செயல் அதிகாரியாக ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ்டோஃப்ர் முல்லர் நியமிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது, 1980 களில் கோடிகளில் லாபம் கொழிக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அடுத்த பத்து வருடங்களில் பின்னர் மோசமான இழப்புகளைச் சந்தித்தது, அதன் பிறகே பிரதமர் மகாதீர் தனியாருக்கு தாரை வார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply