200 கிமீ வேகத்தில் புயல் காற்று ஃபிலிப்பைன்ஸைத் தாக்கியது

மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்துடனான காற்றுடன் ஹகுபித் புயல் ஃபிலிப்பைன்ஸைத் தாக்கியுள்ளது.இப்புயலின் மையம் ஃபிலிப்பைன்றில் வட மேற்காக நகர்ந்துவருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேநேரம் இப்புயல் கரையை தொட்ட முதல் இடமான நாட்டின் கிழக்குப் பகுதியில் வெளியேறியிருந்த மக்கள் சிலர் தற்போது சொந்த இடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. தொடர்ந்து கடுமையான மழை பெய்துவருகிறது. ஆனாலும் அஞ்சிய அளவுக்கு கடல் நீர் ஊருக்குள் புகவில்லை.

சென்ற ஆண்டு ஃபிலிப்பைன்ஸை ஹையான் என்ற புயல் தாக்கியதில் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலுவாக இருந்ததில் ஆட்சேதங்கள் அதிகமில்லை என்று நம்பப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply