ஆர்.எஸ்.எஸ்ஸை பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் மனு
ஆர்எஸ்எஸ் அமைப்பை, உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும், அதன் துணை அமைப்புகளை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாகவும் அறிவிக்க வேண்டும்” என்று கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து 60 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில், “சீக்கியர்கள் நீதியமைப்பு’ என்ற மனித உரிமைகள் அமைப்பு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பாஸிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு, “வீடு திரும்புதல்’ என்னும் பெயரில் சிறுபான்மையின முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றி வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு, பொற்கோயிலில் சீக்கியர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையைத் தூண்டியது, 2008ஆம் ஆண்டு கிறிஸ்தவ பேராலயங்களுக்குத் தீ வைத்தது, கன்னியாஸ்திரிகளை பலாத்காரம் செய்தது, குஜராத் கலவரம் ஆகியவற்றில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் அமைப்பு, சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற அடையாளத்துடன் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்றுவதற்கு அந்த அமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply