பெண் சிசுக்களை கொல்ல வேண்டாம்: நாட்டுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
பெண் சிசுக்களை கொல்ல வேண்டாம் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவோம் என்ற பரப்புரையை தொடங்கிவைத்த பிரதமர், பெண் சிசுக்களை கருவிலேயே கொல்லும் வழக்கத்தை கடுமையாக சாடினார். 18ஆம் நூற்றாண்டைக் காட்டிலும், தற்போது பெண்களுக்கெதிரான பாரபட்சம் அதிகமாக இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, இந்த நிலை நீடித்தால், இந்தியாவின் எதிர்காலம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டினார். பெண் சிசுக்களை கருவிலேயே கொல்ல சில மருத்துவர்கள் துணை போவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், பெண் குழந்தைகளுக்கான சிறப்பு வங்கிக் கணக்கு திட்டம் ஒன்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply