உடல் நல குறைவால் சவூதி அரேபிய மன்னர் மரணம்
சவுதி மன்னர் அப்துல்லாஹ் மரணமடைந்துள்ளார். மரணமடையும்போது இவருக்கு 91 வயது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த பல வாரங்களாக இவர் நோய் வாய்ப்பட்டிருந்ததாக அந்நாட்டுச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இவர் 2005 ஆம் ஆண்டு சவுதியின் மன்னராக தெரிவாகியுள்ளார். 1924 ஆம் ஆண்டு இவர் பிறந்துள்ளார். அப்துல்லாஹ் மன்னர் பரம்பரையில் 10 ஆவது மன்னராக இவர் கருதப்படுகிறார்.இவரது மரணத்தின் பின்னர் இவரது சகோதரரான ஸல்மான் இளவரசர் மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply