தாய்லாந்து கடற்பகுதியில் தீ பற்றி மூழ்கிய படகில் பயணித்த இஸ்ரேல் சிறுமி ஒருவரைக் காணவில்லை

தாய்லாந்து வந்த பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்றில் கடற்பயணம் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகில் தீ பிடித்தது. இதையடுத்து கடலில் மூழ்கிய படகில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தாய்லாந்து அரசு முதலில் அறிவித்தது. ஆனால், அந்த படகில் பயணித்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியைக் காணவில்லை என்று பிறகு அறிவிக்கப்பட்டது. பத்து மணிநேரத்துக்கும் மேல் தேடியும் சிறுமியை மீட்க முடியவில்லை. இந்நிலையில், அந்த சிறுமியின் கதி என்ன என எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply