தாய்லாந்தில் குண்டுவெடிப்பு : 6 பேர் பலி

தாய்லாந்தில் உள்ள கோ சமுய் தீவில் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலும் சேதமடைந்தன. சமுய் தீவின் மத்திய பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பிற்கு, எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய்லாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கோ சமுய் தீவில் வணிக வளாகம் ஒன்றில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply