அரியவகை மரங்களின் பட்டியலிலிருந்து செம்மரத்தை நீக்க ஆந்திர அரசு கோரிக்கை

செம்மரங்களை காப்பதாகக் கூறி 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றுள்ள நிலையில் ஆந்திர அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளது. செம்மரங்களை வெட்டுவதற்கு உள்ள தடையை நீக்குமாறு மத்திய அரசுக்கு ஆந்திர அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகத்திற்கும் ஆந்திர அரசு சார்பில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் அரியவகை மரங்களின் பட்டியலிலிருந்து செம்மரத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இதனை உறுதி செய்துள்ள ஆந்திர வனத்துறை அமைச்சர், கோபால ரெட்டி செம்மரக் கடத்தலை தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறினார். சுற்று சூழலை பொருட்படுத்தாமல் வருமானத்தை மட்டுமே குறியாகக்கொண்டு இந்த நடவடிக்கையை ஆந்திர அரசு மேற்கொண்டுள்ளதாக சுற்று சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply