ஈராக்கில் தீவிரவாதிகளால் ஐ.நா. அதிகாரி கடத்தல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்து பலரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவைசெய்யும் பணியில் ஐ.நா. ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.    இந்தநிலையில் தலைநகர் பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணம் பாகியூபாவில் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரி ஒருவரை மர்மநபர்கள் கடத்திச்சென்று விட்டனர். தொடர்ந்து பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஐ.நா. செய்திதொடர்பாளர் கூறுகையில், ‘ஐ.நா. அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கடத்தப்பட்டார். அவரை தேடும்பணியில் ஈராக் அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். கடத்தப்பட்ட அதிகாரியை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply