ஊதிய விஷயத்தில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டுவது ஊழல்தான் : போப்

ஊதிய விஷயத்தில் ஆண்களைவிட பெண்களுக்கு பாரபட்சம் காட்டுவதும் ஒரு வகையில் ஊழல்தான் என கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் குற்றம்சாட்டியுள்ளார். வாடிகனில் உள்ள பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், ஆண், பெண் சமத்துவம் குறித்து வலியுறுத்தியுனார். பெண்களை வெளியே சென்று வேலை பார்க்க வேண்டாம் எனத் தடுக்கும் ஆண்களை விமர்சித்த போப்,  அப்படியானவர்கள் ஒரு வகையான ஆணாதிக்க சிந்தனையில் உள்ளவர்கள் என தெரிவித்துள்ளார். ஒரே மாதிரியான பணி செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும்  ஊதியத்தில் பாரபட்சம் பார்ப்பது மிக பெரிய ஊழல் என போப் விமர்சித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply