இந்திய நிறுவனமான ஹல்திராம்சின் தயாரிப்புகள் உண்ணத் தகுந்ததல்ல: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிரடி

மேகி சர்ச்சை இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு பொருட்களை சோதனை செய்யக் காரணமாகியுள்ளது. அந்த வகையில் இந்தியத் தயாரிப்பான ஹல்திராம்ஸ் உண்ணத்தகுந்ததல்ல என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பான FDA  தெரிவித்துள்ளது. ஹல்திராம்ஸ் மட்டுமின்றி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல நொறுக்குத்தீனிகள் விற்பனைக்கு தகுதியானதல்ல என்று அமெரிக்காவின் ’வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாக்பூரை மையமாகக் கொண்ட ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாளிதழில் வெளியான இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹல்திராம்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் “எங்கள் தயாரிப்பு 100 சதவீதம் பாதுகாப்பானது. சில ரசாயனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதே நேரம் இங்குள்ள அதே செறிவுடன் அவர்கள் அங்கு அதை அனுமதிப்பதில்லை.” என்றார்.

FDA இணையதளத்தில் உள்ள தகவலின்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதன்முறையாக ஹல்திராம்சில் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்று தொடங்கி, இன்று வரை 86 முறை ஹல்திராம்ஸ் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய அது மறுத்துள்ளது நினைவு கூரத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply